சூரியக் குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோள்களான வியாழனும் சனியும் சுமார் 397 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மிக அருகில் சந்தித்துக்கொண்டன.
பொதுவாக நாம் வாழும் பூமியை போல் மேலும் பல உலகங்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், பல கிரகங்களை பார்ப்பதற்கு போதிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும் அனைவரும் பார்க்க முடியாது. விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்டுள்ள கிரகங்கள் ஒரே இடத்தில் இல்லாமல் தனித்தனியாக சுழன்று வருகிறது. சில சமயங்களில் சில கிரகங்கள் ஒன்றை ஒன்று சந்திக்கும் வாய்ப்பும் விண்ணில் நடக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் அத்தகைய வானியல் அதிசயம் ஒன்று இன்று வானில் தென்பட்டுள்ளது. சூரியக்குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோள்களான வியாழனும், சனியும் சுமார் 397 ஆண்டுகளுக்குப் பிறகு மிக அருகில் சந்தித்துக்கொண்டுள்ளன. இந்த கோள்கள் கடைசியாக கடந்த 1623 ஆம் ஆண்டு அருகருகே சந்தித்துக்கொண்டன. சுமார் 3 நூற்றாண்டுகளுக்கு பிறகு நடைபெற்றுள்ள இந்த அரிய நிகழ்வு விண்வெளி ஆர்வலர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளாது. சூரியன் மறைந்துள்ள நிலையில் இரண்டு கோள்களும் மேற்குத் திசையில் தென்பட்டு வருகின்றன.
இந்த அரிய நிகழ்வை அனைவரும் வெறும் கண்களால் பார்க்கலாம் என பிரில்லா கோலரங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வியாழனும் சனியும் அருகருகே சந்திக்கும் இந்த அரிய நிகழ்வு தற்போது இந்தியா, இலங்கை, மாலத்தீவுகளில் ஆகிய நாடுகளிலும் தென்பட்டு வருகிறது. இந்த கிரகங்கள் இனி அடுத்தததாக 2080 ஆம் ஆண்டு அருகருகே சந்தித்துக்கொள்ளும் என வானியல் ஆய்வாலர்கள் தெரிவித்துள்ளனர்.