கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுச்சேரியில் 339 கிலோ எடையில் சாக்லெட் சிலை செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள ஒரு சாக்லெட் பேக்கரியில் முழுக்க முழுக்க சாக்லெட்டால் செய்யும் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரியும் ராஜேந்திரன் , ஒவ்வொரு ஆண்டும் சாக்லெட்டால் செய்யப்படும் பொருட்களில் தன்னுடைய புதிய கலைத்திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவரது நினைவை போற்றும் வகையிலும் 339 கிலோ எடையில், 5.8 அடி உயரத்தில் அவரது சாக்லெட் சிலையை வடிவமைத்துள்ளனர். 161 மணி நேரத்தில் தத்ரூபமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த சாக்லெட் உருவம் சாக்லெட் பிரியர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்