தமிழகம்

2500 ரூபாய் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி!

2 ஆயிரத்து 500 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை எடப்பாடி தொகுதியில் தொடங்கிய முதலமைச்சர் பழனிசாமி, 2021ஆம் ஆண்டு பொங்கலையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்தார். ஜனவரி 4 முதல் நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். அப்போது, பல்வேறு பயனாளிளுக்கு அவர் பொங்கல் பரிசுப் பொருட்களையும், இரண்டாயிரத்து 500 ரூபாய் நிதியையும் அவர் அளித்தார். இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement:
SHARE

Related posts

தொழிலாளியின் காதை கடித்து துண்டாக்கிய கொடூரம்

செப் 11-ம் தேதி ‘மகாகவி நாளாக’ அறிவிக்கப்படும்: முதலமைச்சர்

Ezhilarasan

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

Leave a Reply