அடுத்த 25 ஆண்டுகள் ஆனாலும் மகளிர் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
I.N.D.I.A. கூட்டணியின் சார்பில் சென்னையில் அக்டோபர் 14ஆம் தேதி மகளிர் மாநாடு ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறு குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்,
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கூறியதாவது:
கலைஞர் நூற்றாண்டு விழா, பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா உள்ளிட்வை குறித்து விவாதிப்பதற்காக அக்டோபர் மாதம் 14ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். முதலமைச்சரும் கலந்துகொள்கிறார்.
I.N.D.I.A. கூட்டணியை பொருத்தவரை முதலமைச்சர் அவர்களின் பங்களிப்பு என்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது இந்த கூட்டம் இங்கு முதன்முதலாக நடைபெறுகிறது நிச்சயமாக கவனத்தைப் பெறக்கூடிய கூட்டமாக இருக்கும்.
33% சதவிகித பெண்கள் இட ஒதுக்கீடு சட்டத்தை மட்டும் கொண்டு வந்துவிட்டு அது என்று நடைமுறைக்கு வரும் என்று தெரியாத நிலையில் உள்ளது. அடுத்த 25 ஆண்டுகள் ஆனாலும் நடைமுறைக்கு வருமா என்று சந்தேகமாக உள்ளது,
பாராளுமன்றத்தில் யார் குரல் கொடுத்தாலும் அவர்களை பேசவிடாமல் செய்கின்றனர். எனவே நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வீழ்த்துவதே எங்கள் நோக்கமாக இருக்கும் என கனிமொழி தெரிவித்தார்.
சென்னை வரும் சோனியா காந்தி முதலமைச்சர் ஸ்டாலினை சந்திப்பாரா என்ற கேள்விக்கு அதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், எனினும் நிச்சயமாக சந்திப்பு இருக்கும் என்றும் அவர் கூறினார்.
=====================================================================