மத்தியில் மோடி, மாநிலத்தில் ரஜினி என்ற கொள்கை அடிப்படையில் ஆன்மீக அரசியலை முன்னிறுத்தி 234 தொகுதிகளிலும் ரஜினிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பேசியுள்ளார்.
நாமக்கலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2021 சட்டப்பேரவை தேர்தலில் திராவிட கட்சிகளை அகற்றும் பொருட்டு ஆன்மீக அரசியலை முன்னெடுத்து ரஜினி களம் இறங்கி இருக்கிறார்.இதற்காக மாவட்ட வாரியாக சென்று மாநாடுகளை நடத்தி வருகிறோம்.விழுப்புரம், தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்தடுத்து ஆன்மீக அரசியல் மாநாடு இந்து மக்கள் கட்சியால் நடத்தப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆன்மீக அரசியல் என்பது நேர்மையான, ஊழலற்ற, ஏழைகளுக்கு பாதுகாப்பான ஒரு அரசியல் முறையாகும்.தமிழகத்தில் ரஜினியின் கட்சி ஆட்சிக்கு வர வேண்டி 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய உள்ளேன் எனவும், மத்தியில் மோடி, மாநிலத்தில் ரஜினி என்பது எங்கள் கொள்கை ஆகும் என்றும் அவர் பேசியுள்ளார்.