2024-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தின விருந்து நிகழ்ச்சியில் பல்வேறு குடியரசு கட்சியின் தலைவர்கள் மத்தியில் பேசிய அவர், தம்முடைய நான்கு ஆண்டுகால பதவி காலம் மிகவும் அற்புதமான காலமாக இருந்ததாக கூறினார். இன்னொரு நான்கு ஆண்டுகள் ஆட்சி புரிய தாம் முயற்சித்ததையும் சுட்டிக்காட்டிய அவர், அடுத்த நான்கு ஆண்டுகள் கழித்து கட்சியினரை சந்திப்பதாகவும் குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2024- ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவதற்கான சாத்தியங்கள் குறித்து தமது நெருங்கிய வட்டாரங்களில் ஆலோசித்து வரும் டிரம்ப், அதற்கான பிரசாரத்தை, புதிய அதிபர் ஜோ பைடன் பொறுப்பேற்கும் ஜனவரி 20-ம் தேதி அன்றே தொடங்கலாமா என்றும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஜோ பைடன் பதவி ஏற்பு விழாவை டிரம்ப் புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.