அதிமுக அரசு தோல்வி பயத்தில்தான், திமுகவின் கிராமசபை கூட்டங்களை நடத்த விடுவதில்லை என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றச்சாட்டியுள்ளார்.
பெட்ரோல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டம், விவசாயிகளை பட்டினிக்கு கொண்டு செல்லக்கூடிய சட்டம் எனவும், அம்பானி அதானி ஆகியோருக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது என்றும் விமர்சித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பை ஏற்பார் என்றும் வேல்முருகன் கூறினார்.