2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் வணிகர்களுக்கு ஐந்து தொகுதி ஒதுக்க வேண்டும் என தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில தலைவர் முத்துக்குமார் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உடன்குடியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் உடன்குடி பகுதியைச் சேர்ந்த வியாபாரி முன்னேற்ற சங்க உறுப்பினர்கள் 80 பேர் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையில் இணைந்தனர். அவர்களுக்கு மாநில தலைவர் முத்துக்குமார் சால்வை அணிவித்து வரவேற்றார். மேலும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உடன்குடி பகுதி குளங்கள் ஆறுகளுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி 26 ஆம் தேதி உடன்குடி விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அன்று கடைகளில் பச்சை கொடி கட்டப்படும் எனவும் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் வணிகர்களுக்கு ஐந்து தொகுதி ஒதுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில தலைவர் முத்துக்குமார், சட்டப்பேரவையில் வணிகர்களின் பங்கேற்பை உறுதி செய்யும் வகையில் வரும் தேர்தலில் வணிகர்கள் போட்டியிட முக்கிய அரசியல் கட்சிகள் வாய்ப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.