2021 ஏப்ரல் வரை பொறியியல் கல்லூரிகளில், ஆன்லைன் வாயிலாக மட்டுமே வகுப்புகள் நடத்த, பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் நடப்பு கல்வியாண்டு முழுவதும், ஆன்லைன் வகுப்புகள் தொடரும் எனவும், வரும் ஏப்ரல் மாதம் வரை ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்திட வேண்டும், எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புகளில், ஒரு நாளைக்கு 5 பாட வேளைகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும், என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு மட்டும், டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நேரடி வகுப்புகள் நடைபெறும், எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.