உலகம்

2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 50 பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக RSF அமைப்பு தகவல்!

உலகம் முழுவதும் 2020 ஆம் ஆண்டில் சுமார் 50 பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக Reporters Without Borders என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் போர், உள்நாட்டு கலவரம், உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்கள் தொடர்பான ஆய்வை Reporters Without Borders என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மேற்கொண்டு வருகிறது. இதன்படி 2020 ஆம் ஆண்டில் இந்த அரசு சாரா அமைப்பு நடத்திய அய்வின் படி உலகம் முழுவதும் சுமார் 50 பத்திரிக்கையாளர்கள் ஊழல் மற்றும் குற்றங்கள் தொடர்பாக புலனாய்வு செய்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், ஊழல் அல்லது சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து விசாரிக்கும் நிருபர்களை இலக்கு வைப்பதில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதுள்ளதாகவும் 84% பேர் தங்கள் பணிக்காக “வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பத்திரிக்கையாளர் கொலைகள் அதிகம் நடைபெறும் நாடுகளின் முதன்மையானதாக மெக்சிகோ, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் ஆகிய நாடுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனாவை தொடர்ந்து சீனாவிற்கு வந்த புதிய விருந்தாளி

EZHILARASAN D

தொடரும் பணி நீக்கம்: ஷேர்சாட் நிறுவனத்திலும் ஆட்குறைப்பு..

Web Editor

டூம்ஸ்டே கடிகாரத்தில் 90 வினாடிகள் மட்டுமே பேலன்ஸ்; உலகம் அழிவை நெருங்கிவிட்டது -வல்லுநர்கள் எச்சரிக்கை

Yuthi

Leave a Reply