முக்கியச் செய்திகள் லைப் ஸ்டைல்

2020ம் ஆண்டில் பிரபலங்கள் மத்தியில் ட்ரெண்டான ஃபேஷன் ஆடைகள்!

2020ம் ஆண்டில் பல்வேறு மாற்றங்கள், கட்டுப்பாடுகள் இருந்தாலும், Fashion என்று வரும் போது அது எப்போதும் போல் அனைவரையும் ஈர்க்கும் வகையில்தான் இருந்துள்ளது. இந்த ஆண்டில் புதிய புதிய ஆடைகள் மட்டுமல்லாமல், ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட ஃபேஷன் ஆடைகளும் மீண்டும் ட்ரெண்டாக ஆரம்பித்துள்ளன. அதில் சில ஆடைகளை பிரபலங்கள் பலர் அணிந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் அப்லோட் செய்திருந்ததை பார்த்திருப்பீர்கள்.

Polka Dots:


கருப்பு நிறம் மற்றும் வெள்ளை நிற புள்ளிகளுடன் கூடிய இந்த ஆடை, இந்த ஆண்டு அதிகமானோரை கவர்ந்துள்ளது. நடிகை அனுஷ்கா சர்மாவும் இந்த உடை அணிந்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

Neons:

ஏராளமான பெண்கள் நியான் ஆடைகளையே அணிய விரும்புகின்றனர். இதன் பளீர் நிறம் அவர்களை அதிகம் கவர்ந்துள்ளது. இதுபோன்ற ஆடைகள் Simple ஆக இருந்தாலும் elegant லுக் தருகின்றன. குறிப்பாக இரவு நேரத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு பெண்களின் தேர்வு இதுவாகதான் உள்ளது.

Tulle:

இந்த ஆண்டு Tulle skirt ட்ரெண்ட் ஆகியுள்ளது. தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகைகள் நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு இதனை அதிகம் உபயோகித்துள்ளனர். இதில் ஏராளமான டிசைன்களும் இருக்கின்றன.

Tie-Dye:

கொரோனா காலத்தில் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டதால், எளிமையான ஆடைகளை அணியவே பெண்கள் பலர் விரும்பினர். அந்தவகையில் Tie dye Sweatshirts அதிகம் பிரபலம் ஆனது.

Sequins:

பெண்கள் பார்ட்டி செல்வதற்கு இந்த ஆடையை அதிகம் தேர்வு செய்கின்றனர். குறிப்பாக நடிகைகள் திரைபடங்களிலும், ஃபோட்டோஷூட்களிலும் இந்த ஆடையை அணிந்துள்ளதை பார்த்திருப்பீர்கள்.

Dramatic Sleeves:

Sleeves மிகப்பெரிதாகவும், நீளமாகவும் இருப்பதே தற்போதைய ட்ரெண்ட். பிரபலங்கள் பலரது தேர்வு இதுவாகதான் இருந்துள்ளது. தங்கள் வசதிக்கு ஏற்றாற்போல் இதில் சில மாற்றங்களையும் செய்து அணிந்து கொள்கின்றனர்.

Advertisement:

Related posts

நாளை மறுதினம் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்கிறார்!

திமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் கொரோனா நிதி!

பிப்ரவரி 5ஆம் தேதி வரை சட்டமன்றக் கூட்டத் தொடர்: சபாநாயகர் அறிவிப்பு!

Nandhakumar

Leave a Reply