சோனியா காந்தியால் காங்கிரஸ் கட்சியை சரியாக கையாள முடியவில்லை என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த ஆகஸ்ட் 31 ம் தேதி மரணம் அடைந்தார். தாம் குடியரசுத் தலைவராக இருந்த காலகட்டம் குறித்து பிரணாப் புத்தகம் எழுதி உள்ளார். இந்த புத்தகம் வரும் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. பிரணாப் தாம் எழுதியுள்ள புத்தகத்தில், 2004 ஆம் ஆண்டு தாம் பிரதமர் ஆக்கப்பட்டிருந்தால், காங்கிரஸ் கட்சிக்கு 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மோசமான தோல்வி ஏற்பட்டிருக்காது என்று கூறி இருக்கிறார். தாம் 2012-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவராக பதவி ஏற்றபின்னர், காங்கிரஸ் தலைமை அரசியலில் கவனம் செலுத்தத் தவறி விட்டதாக கூறி உள்ளார். சோனியா காந்தியால் காங்கிரஸ் கட்சியை சரியாக கையாள முடியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டி உள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் தமது கூட்டணி கட்சிகளை தக்க வைத்துக் கொள்வதில் நேரம் செலவிட்டதால், அவரது அரசு கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறி உள்ளார். மன்மோகன் சிங் நாடாளுமன்றத்துக்கு நீண்ட நாட்களாக வரவில்லை என்பதால், அவருக்கு எம்.பி-களுடனான தனிப்பட்ட தொடர்புகள் இல்லாமல் போய்விட்டதாகவும் பிரணாப் கூறி உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்