
அடுத்த 36 மணி நேரத்தில் வங்கக் கடலில் புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.
தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 36 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேலும் வலுப்பெற கூடும். இது மேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 2ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை கடற்பகுதிகளை நெருங்கும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் அதீத கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது; தமிழகம் மற்றும் புதுவையில் டிசம்பர் 1ஆம் தேதி ஒரு சில இடங்களில் கனமழைக்கும், பெரும்பாலான இடங்களில் மழைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் டிசம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிககனமழைக்கும்,ஓரிரு இடங்களில் அதீத கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை கடல் சீற்றத்துடன் காணப்படுவதோடு சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் நாளை இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.