தமிழகம்

2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து விவாதிக்க தயாரா என முதல்வருக்கு ஆ.ராசா கேள்வி!

2ஜி ஸ்பெக்ட்ரம் உட்பட திமுக மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நேருக்கு நேர் தன்னுடன் விவாதிக்க தயாரா என முதலமைச்சருக்கு ஆ.ராசா சவால் விடுத்துள்ளார்.

சென்னை அறிவாலயத்தில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப்பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, திமுக மீது முதலமைச்சர் முன் வைத்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை தங்களுடையது என தெரிவித்தார்.

மேலும் முதலமைச்சர் விவசாயியாக இருந்திருந்தால் வேளாண் சட்டங்கள் குறித்து தெரிந்திருக்கும் என அவர் கூறினார். 2 ஜி வழக்கு உட்பட ஏதாவது ஒரு குற்றச்சாட்டு திமுக மீது நிரூபிக்கப்பட்டு இருக்குமானால் நேருக்கு நேர் கோட்டையில் தன்னுடன் விவாதிக்க தயாரா? என்றும் முதலமைச்சருக்கு ஆ.ராசா சவால் விடுத்தார்.

Advertisement:

Related posts

அதிமுகவின் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் – முதல்வர்

Gayathri Venkatesan

அதிமுக கொடி விவகாரம்; அமைச்சர்கள் மீண்டும் புகார்

Jayapriya

நாளை முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் பழனிசாமி!

Saravana

Leave a Reply