2ஜி அலைக்கற்றை மேல்முறையீடு வழக்கால் தி.மு.க வாக்கு வங்கிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ராஜாஜியின் 142 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை பாரி முனையில் அவரின் உருவப்படத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜாஜி நாட்டுக்கு ஆற்றிய பணிகள் அளப்பரியது என தெரிவித்தார். மறைந்த தலைவர்களைப்பற்றி அவதூறாகப் பேசக்கூடது என உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டிருந்தும், ஆ.ராசா அதனை மீறி செயல்பட்டு வருவதாகக் கூறி உள்ளார். கருணாநிதி ஆட்சியைப் பற்றி பேச நிறைய தகவல்கள் உள்ளபோதிலும், மறைந்த தலைவர்கள் குறித்து பேசக்கூடாது என்பதால் தாங்கள் அமைதிகாப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2ஜி அலைக்கற்றை வழக்கு தி.மு.க-வினரின் தலையில் கத்தி தொங்குவது போல ஆபத்தானது என்று கூறிய அவர், தி.மு.க வினர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். ஜெயலலிதா மரண விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சூரப்பா விவகாரம் குறித்து, முதல்வரிடம் ஆளுநர் எந்த விசாரணையும் நடத்தவில்லை என்று கூறினார்.