கொரோனா தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் வரும் பிப்ரவரி மாதம் வரை நடத்தும் திட்டம் இல்லை என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் ஜனவரி மாதமும், அதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் எழுத்துத் தேர்வுகளும் நடைபெறும். மார்ச் மாதம் தேர்வுகள் அனைத்தும் நடத்தி முடிக்கப்படும். ஆனால், இந்த முறை கொரோனா தொற்றுப் பரவல் இன்னும் சில மாநிலங்களில் தொடர்ந்து நீடித்து வருவதை அடுத்து தேர்வுகள் நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காணொலி காட்சி வாயிலான ஆசிரியர்களுடனான கலந்துரையாடலின்போது பேசிய மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் நிஷாங்க், இப்போதைய சூழலில் வரும் பிப்ரவரி மாதம் வரை தேர்வுகள் நடத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று கூறி உள்ளார். 2021 ஆம் ஆண்டு தேர்வுகள் நடத்துவது குறித்து தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். பெற்றோர், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் போதுமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.