முக்கியச் செய்திகள் குற்றம்

10 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் அருகே தம்மநாயக்கண்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் அப்பகுதியில் வசிக்கும் சிறுமிகளுக்கு டிவியில் கார்ட்டூன் படம் காட்டுவதாக தமது வீட்டிற்கு அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்கள் எழுந்தன. 10 சிறுமிகளிடம் அவர் இத்தகைய அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்தவிவகாரம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கடந்த 2014-ம் ஆண்டு தங்கவேலுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த தங்கவேலுவுக்கு, இயற்கை மரணம் அடையும் வரை வாழ்நாள் சிறை தண்டனையும், 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பரிமளா தீர்ப்பளித்தார். மேலும், அதிகம் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தங்கக்கவசம் வழங்கக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு – மதுரை நீதிமன்றம் உத்தரவு

EZHILARASAN D

2 குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என சட்டம் வந்தால் ஆதரிக்க மாட்டேன்-ஒவைஸி

Web Editor

பள்ளிகளில் அதிகரிக்கும் கொரோனா; ஆட்சியர்களுடன் இறையன்பு ஆலோசனை

G SaravanaKumar

Leave a Reply