சென்னை குரோம்பேட்டையில், முடங்கி கிடந்த ரெயில்வே சுரங்கப்பாதை பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது.
பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டை ராதா நகரில் இருந்து ஜி.எஸ்.டி சாலைக்கு செல்வதற்காகன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கபாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால் 10 ஆண்டுகளாக நிலம் கையகபடுத்தும் பணியால் கிடப்பில் போடப்பட்ட திட்டம் தற்போது மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனை தொடர்ந்து ரெயில் நிலையத்தில் இருந்து ஜி.எஸ்.டி சாலை வழியாக 393 மீட்டரில் சுரங்கபாதை அமைக்க்கப்படுகிறது. மேலும் 17 கோடி ரூபாய் மதிப்பிட்டில் நடைபெறும் இந்த பணிகளை பல்லாவரம் முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங், முன்னாள் நகர மன்ற துணை தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அந்த பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த பணிகள் இன்னும் இரண்டு ஆணடுகளில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.