முக்கியச் செய்திகள் தமிழகம்

ஹோட்டலில் உபசரிப்பு சரிவர இல்லாததால் ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு!

ஹோட்டலில் உபசரிப்பு சரிவர இல்லாததால் ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சித்தர் காட்டில் நேற்று இரவு அடையாளம் தெரியாத இரண்டு பேர் சாப்பிடுவதற்காக தனியார் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு ஊழியர்கள் மேசையை சுத்தம் செய்து உணவு வைக்க தாமதப்படுத்தியதாக கூறபடுகிறது இதனால் மது போதையில் இருந்த அவர்கள் கோபத்தில் வாக்குவாதம் செய்து தகாத வார்த்தையால் ஹோட்டல் ஊழியர்களை திட்டியுள்ளனர். பின்பு அங்கு வந்த கடையின் உரிமையாளர் மகன் வேலாயுதம் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினார்.

மது போதையில் இருந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஆட்களை அழைத்து வந்து கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களை கொண்டு கடை ஊழியரையும் கடை உரிமையாளர் மகனையும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கார்த்தி, சிவகுமார் ஆகியோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடை உரிமையாளரின் மகன் வேலாயுதம் தனியார் மருத்துவமனையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

கேரள உள்ளாட்சித் தேர்தல்: ஒரு ஓட்டில் பாஜகவிடம் தோல்வியடைந்த காங்கிரஸ் மேயர் வேட்பாளர்!

Arun

வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது: மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார்

Arivazhagan CM

குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி

Arivazhagan CM

Leave a Reply