செய்திகள்

ஹைதியில் சிறுவர்கள் உட்பட 17 பேர் கடத்தல்

ஹைதியில் சிறுவர்கள் உட்பட 17 அமெரிக்கர்களை மர்ம கும்பல் ஒன்று கடத்தி சென்றுள்ளது.

கரீபியன் தீவு நாடான ஹைதியில் அவ்வப்போது கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில், அந்நாட்டின் தலைநகர் போர்ட் அவ் பிரின்சில் இருக்கும் தேவாலயத்தில் பணியாற்றி வரும் அமெரிக்கர்கள் தங்களது குடும்பத்தினருடன் அங்கிருக்கும் அனாதை ஆசிரமத்திற்கு சென்றுவிட்டு பேருந்தில் தங்களது இல்லத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது, மர்ம கும்பல் ஒன்று பேருந்தை இடைமறித்து அதில் இருந்த சிறுவர்கள் உட்பட 17 பேரை கடத்தி சென்றது. கடத்தப்பட்டவர்களை மீட்கும் முயற்சியில் ஹைதியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக கடந்த வாரம் பள்ளி பேருந்தின் மீது மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில் 5 மாணவர்கள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற குற்றச்செயல்களை தடுக்க அமெரிக்க படைகளின் உதவி வேண்டும் என அந்நாட்டு மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் படைகளை ஹைதிக்கு அனுப்ப தயக்கம் காட்டுவதாக செய்திகள் வெளியாகின்றன.

Advertisement:
SHARE

Related posts

பிரேசில் தடுப்பூசி ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை: பாரத் பயோடெக் மறுப்பு

Halley karthi

நடிகை யாமி கவுதம் திடீர் திருமணம்: இயக்குநரை மணந்தார்!

Halley karthi

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார்!