ஆத்தூர் அருகே தம்மம்பட்டியில் ஹெல்மெட் அணியாமல் தனியார் மினி பேருந்தை ஓட்டியதாக அதன் உரிமையாளருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். இவருக்கு சொந்தமான மினி பேருந்து தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் தகுதிச் சான்று ( எஃப்.சி) பெற ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு மினி பேருந்தை சரவணன் கொண்டு சென்றுள்ளார். அங்கு மோட்டார் வாகன ஆய்வாளரின் ஆய்வின் போது அந்த மினி பஸ்சிற்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட இ- சலான் ரசீதுக்கு பணம் செலுத்த கூறியுள்ளார்கள், வாகனத் தகுதிச் சான்றுக்கான அனைத்து கட்டணங்களும் செலுத்தப்பட்ட நிலையில், இ- சலானில் அபராதமா என சந்தேகமடைந்த சரவணன் அங்கு கொடுத்த இ-சலானை பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. ஹெல்மெட் போடாமல் மினி பேருந்தை ஓட்டியதாக மணச்சநல்லூரில் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தது இ சலானில், குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைப் பார்த்து சரவணன் அதிர்ச்சி அடைந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்