ஹர்திக் பாண்டியா , ரவீந்தர ஜடேஜாவும் இந்திய அணியின் மிகப்பெரிய சொத்து என முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2க்கும் 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இதில் நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியின் வெற்றிக்கு இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களான ஹர்த்திக் பாண்டியாவும், ரவீந்தர ஜடேஜாவும் பேருதவியாக இருந்தனர். நேற்றைய போட்டியில் இக்கட்டான சூழலில் ஜோடி சேர்ந்த இருவரும் சிறப்பான அட்டத்தை வெளிபடுத்தி 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்தனர். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 300 ஐ எட்டியது. இதில் ஜடேஜா 66 ரன்களிலும் ஹர்திக் பாண்டியா 92 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனும் இன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, ஒரு நாள் தொடரை இழந்ததற்கு மத்தியில் இது ஒரு நல்ல வெற்றி. இன்னும் டி20 மற்றும் டெஸ்ட் தொடர்கள் இருப்பதால் இந்தியாவுக்கு சாதகமான சூழல் விரைவில் வரும் என நம்புகிறோம். இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களான ஜடஜேவும், ஹர்திக் பாண்டியாவும் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. கடினமான சூழலிலும் சிறப்பான விளையாடுகிறார்கள் என பதிவிட்டுள்ளார்.