உலகம்

ஸ்பெயின் நாட்டில் 4 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

பிரிட்டனை தொடர்ந்து ஸ்பெயின் நாட்டில் 4 பேருக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது

கொரோனா வைரஸ் தொற்றில் புதிய பிறழ்வு பிரிட்டன், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று சாதாரண கொரோனாவை காட்டிலும் 70% பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பிரிட்டன் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் பயணத்தடைகளை விதித்துள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் 4 பேருக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. புதிய வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் நான்கு பேரும் பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் புதிய கொரோனா அறிகுறிகளுடன் மூன்று பேர் உள்ளதாகவும் அவர்களின் முடிவுகள் செவ்வாய் அல்லது புதன்கிழமைகளில் கிடைக்கும் என்று ஜாபடெரோ கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ரோஹிங்கியாக்களை மியான்மர் திரும்பப்பெற வேண்டும்: வங்கதேசம்

Mohan Dass

இத்தாலி தலைநகர் ரோமில் புத்தாண்டு கொண்டாட்டத்தால் உயிரிழந்த பறவைகள்!

Saravana

‘பாகிஸ்தான்’ உலகின் மிக ஆபத்தான நாடு – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

EZHILARASAN D

Leave a Reply