குஜராத்தில் சிறை தண்டனை பெறும் கைதிகள் வைரங்களை மெருகூட்டும் தொழில் செய்து மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பதாக சிறை அதிகாரி மனோஜ் நினோமா தெரிவித்துள்ளார்.
சிறைகளில் தண்டனை பெற்று வரும் கைதிகளுக்கு பணி வழங்கி அதன் மூலம் அவர்களுக்கு வருமானத்தை பெறும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்தவகையில் குஜராத் மாநிலம் சூரத் லஜ்பூர் சிறையில் தண்டனை பெறும் கைதிகளின் வாழ்க்கையை மேம்படுத்த புதிய நடவடிக்கையாக வைரங்களுக்கு மெருகூட்டும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் அவர்கள் சம்பாதிப்பதாகவும் சிறை அதிகாரி மனோஜ் நினோமா கூறினார். மேலும், 45 கைதிகள் வைரத்தை மெருகூட்டும் வேலை செய்து வருவதாகவும், மற்றவர்களின் திறன்களை கண்டறிந்து, அதற்கேற்ப அவர்களுக்கும் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சிறை அதிகாரி தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்