வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை ரத்து செய்யப்படாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 20 நாட்களுக்கும் மேலாக கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் புதிய வேளாண் சட்டத்தில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து மத்தியப் பிரதேச விவசாயிகளுடன் காணொலிக் காட்சி மூலம் உரையாடிய பிரதமர் மோடி, விவசாயிகளில் நலனுக்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ள சீர்திருத்தங்களை கண்டு எதிர்கட்சிகள் அஞ்சுவதாகவும் 6,7 மாதங்களுக்கு பின்னர் திடீரென வேளாண் சட்டங்களை எதிர்க்கட்சிகள் எதிர்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.
மேலும் வேளாண் சட்டங்கள் குறித்து தவறான தகவல்களை பரப்புவதை எதிர்கட்சிகள் நிறுத்த வேண்டும் என தெரிவித்த அவர் வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதாரவிலை ரத்து செய்யப்படாது எனவும் அவர் தெரிவித்தார்.