தமிழகம்

வேளாண் சட்டத்தால் ஏற்படும் நன்மை, தீமைகளுக்கு அரசு பொறுப்பேற்காது என கூற காரணம் என்ன? : சீமான் கேள்வி!

எதிர்க்கின்ற வகையிலே அனைத்து சட்டங்களையும் கொண்டு வந்தால், எதிர்க்காமல் என்ன செய்வது, என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள், பேரெழுச்சியாக போராடி வருவதாக கூறினார். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, நாம் தமிழர் கட்சி போராடி வருவதாக சீமான் குறிப்பிட்டார். மேலும், அத்தியாவசிய பொருட்களாக இருக்கும் பொருட்களையே பதுக்குபவர்கள், அத்தியாவசியப் பொருட்கள் இல்லை என்று சொல்லிவிட்டால், எவ்வளவு பதுக்குவார்கள் என சீமான் கேள்வி எழுப்பினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியாவது, முன்பு விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தார். ஸ்டாலின் எந்த வகையில் விவசாயி என சீமான் வினவினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கனல் கண்ணனை விடுதலை செய்யவில்லை என்றால்…இந்து முன்னணி

EZHILARASAN D

மாணவர்களிடையே ஆளுநர் அரசியலை புகுத்துகிறார்- அமைச்சர் பொன்முடி

G SaravanaKumar

மூதாட்டியை கொன்ற ராணுவ வீரர் தப்பியோட்டம்

Janani

Leave a Reply