முக்கியச் செய்திகள் தமிழகம்

வேளாண் சட்டங்கள்: வீட்டு வாசலில் கோலமிட்டு எதிர்ப்பை தெரிவித்த கிராம மக்கள்!

செஞ்சியை அடுத்த சண்டிசாட்சி கிராம மக்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இன்று விவசாய அமைப்புகளும் தொழிற் சங்கங்களும் ஆதரவு தெரிவித்து கடையடைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் செஞ்சியை அடுத்த சண்டிசாட்சி கிராம மக்கள் வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க கோரியும் வீட்டு வாசலில் கோலமிட்டு எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திலும் முழு பந்த்க்கு ஆதரவு தெரிவித்து கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் சண்டிசாட்சி கிராம மக்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக இதில் இணைந்துள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக மேல்மலையனூர், செஞ்சிப் பகுதியில் மருந்தகம் மற்றும் பழக் கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

Advertisement:

Related posts

புற்றுநோயிலிருந்து மீண்டது எப்படி? மனம் திறக்கிறார் சோனாலி பிந்த்ரே!

Saravana Kumar

திமுக – காங்கிரஸ் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு!

Ezhilarasan

கூட்டணி கட்சிகள் கேட்கும் இடங்களை அப்படியே தர முடியாது: ஆர்.எஸ்.பாரதி

Karthick

Leave a Reply