வேளாண்மை சட்டங்கள் விஷயத்தில் அர்த்தமற்ற திருத்தங்களுக்கு பதில், உறுதியான முடிவுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
டெல்லி அருகே சிங்கு எல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ், மத்திய அரசு விவசாயிகளுக்கு எழுதியுள்ள கடித த்தில் விவசாய அமைப்புகளின் செயலை களங்கப்படுத்துவதாக இருப்பதாக கூறினார். வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் செய்வதற்கு பதில் அதனை கைவிட வேண்டும் என்று தாங்கள் மீண்டும், மீண்டும் வலியுறுத்துவதையும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே வேளாண் சட்டங்கள் குறித்து உறுதியான முடிவுகளைக் கொண்ட முடிவை எழுத்துப்பூர்வமாக மத்திய அரசு தங்களிடம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அரசுடனான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். எதிர்கட்சிகளை கையாளுவதைப் போலவே போராடும் விவசாய அமைப்புகளை மத்திய அரசு கையாளுவதாகவும் அவர் குறிப்பிட்டார். விவசாயிகளுடன் தொடர்பு இல்லாத அங்கீகாரம் இல்லாத வேளாண் அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இதன் மூலம் தங்களது போராட்டத்தை வலுவிழக்க செய்ய மத்திய அரசு முயற்சிப்பதாகவும் யோகேந்திர யாதவ் வேதனை தெரிவித்தார்.