முக்கியச் செய்திகள் இந்தியா

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி வரும் 14ம் தேதி நாடு தழுவிய போராட்டம்! – விவசாய சங்கங்கள் அறிவிப்பு!

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி வரும் 14ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாய சங்கங்கள் சார்பில் கடந்த நவம்பர் 26ம் தேதியில் இருந்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள தயாராக இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்துள்ள விவசாய சங்கங்கள், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் வரை போராட்டங்கள் தொடரும் என அறிவித்துள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வரும் 12ம் தேதி டெல்லியின் முக்கிய சாலையான டெல்லி – ஜெய்ப்பூர் சாலை முடக்கப்படும் என்றும், அதன் பிறகு மற்ற சாலைகள் படிப்படியாக முடக்கப்படும் என்றும் விவசாய சங்கத் தலைவர் தர்ஷன் பால் தெரிவித்தார். இதை அடுத்து வரும் 14ம் தேதி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 9 சட்டமன்ற உறுப்பினர்கள் கைது

Arivazhagan Chinnasamy

அதிமுக வேட்பாளரை ஆதரித்து கர்நாடக அமைச்சர் வாக்கு சேகரிப்பு!

Gayathri Venkatesan

கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது; முதலமைச்சர் வழங்கினார்

G SaravanaKumar

Leave a Reply