வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், மனு கொடுத்துள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
கிசான் மஸ்தூர் சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் 60 பேர், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரைச் சந்தித்துப் பேசினர். அப்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பான கடிதத்தை அமைச்சரிடம் அளித்த அவர்கள், வேளாண் சட்டங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இதனைத் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி குடியரசு தலைவரிடம் ராகுல் காந்தி மனு கொடுத்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த நரேந்திர சிங் தோமர், ராகுல் காந்தி பேசுவதை காங்கிரஸ் கட்சியினரே பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை என குறிப்பிட்டார். அதோடு, காங்கிரஸ் கட்சி, எப்போதும் விவசாயிகளுக்கு எதிரானது என்றும் அவர் விமர்சித்தார்.