வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்பதால், தற்போது நடைபெற்ற போராட்டம் தேவையற்றது என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் நம்பியார்நகரில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி குறித்து மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் வேலுமணி, வேளாண் சட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறினார்.இப்படி முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் திமுக, வேளாண் சட்டங்களால் என்ன பாதிப்பு என்று கூற முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: