முக்கியச் செய்திகள் தமிழகம்

வேட்புமனுத் தாக்கலில் புதிய கட்டுப்பாடு; மாநில தேர்தல் ஆணையம்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கலின்போது, வேட்பாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என மாநில தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள மாநில தேர்தல் ஆணையம், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக வரும் சனிக்கிழமையன்றும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தெரிவித்துள்ளது.

வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வேட்பாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவார் என்றும், ஒருவேளை வேட்பாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அவரை முன்மொழிபவர் வேட்புமனுவைத் தாக்கல் செய்யலாம் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வேட்புமனுத்தாக்கல் செய்யும் வேட்பாளர்களின் விவரங்கள் tnsec.tn.nic.in என்ற மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

“பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்கப்படும்” – சுகாதாரத் துறை செயலாளர்

Niruban Chakkaaravarthi

ஷங்கர் வேற லெவல் இயக்குநர்.. புகழும் பாலிவுட் நடிகை

Saravana Kumar

டெல்டா வகை கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தும்: உலக சுகாதார அமைப்பு

Gayathri Venkatesan