28.9 C
Chennai
September 26, 2023
உலகம்

வெள்ளை மாளிகை நினைவுகள்: புத்தகம் எழுதுகிறார் மெலனியா ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலனியா, வெள்ளை மாளிகையில் வசித்த காலம் குறித்து புத்தகம் எழுத திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்ததை அடுத்து, வரும் ஜனவரி 20ஆம் தேதிக்குப் பின்னர் அவரும், அவரது மனைவி மெலனியாவும் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுகின்றனர். இதனையடுத்து அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கவுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் வசித்த காலம் குறித்து புத்தகம் ஒன்றை மெலனியா ட்ரம்ப் எழுத உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக பேஜ் சிக்ஸ் என்ற பதிப்பக நிறுவனத்துடன் மெலனியா ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதற்கு முன்பு மெலனியாவின் மூத்த ஆலோசகராக வெள்ளை மாளிகையில் பணியாற்றிய ஸ்டீபனி வின்ஸ்டன் வோல்காஃப் தமது வெள்ளை மாளிகை காலம் குறித்து புத்தகம் எழுதினார். இது மிகுந்த பரபரப்புடன் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தானிலும் பரவியது புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று!

Saravana

அமெரிக்காவில் முதல் முறையாக 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

Saravana

மண்டேலாவின் ’சிறை கடிதங்கள்’ செய்த புரட்சி!

Vandhana

Leave a Reply