தமிழகம் செய்திகள்

வெல்ல ஆலை மீது தீ வைப்பு சம்பவம்: சிகிச்சை பலனின்றி வடமாநில தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு!

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலை கொட்டகை மீது தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் படுகாயம் அடைந்த 4 வட மாநில தொழிலாளர்கள்ில் ஒருவர் உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் முத்துசாமி
என்பவருக்கு சொந்தமான வெல்ல ஆலை கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் ஆலை கொட்டகையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த குடிசை முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தில் தூங்கி கொண்டிருந்த 4 வட மாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

4 தொழிலாளர்களும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நீதிபதி வாக்கு மூலம் வாங்கிச் சென்றார். அதனை தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் பார்த்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

ஒடிசாவை சார்ந்த ராகேஷ் (வயது 19), சட்டீஸ்கர் மாநிலத்தை சார்ந்த சுகுராம்
(வயது 28), எஸ்வந்த் (வயது 18), கோகுல் (வயது 23), ஆகிய நான்கு வடமாநில
தொழிலாளர்கள் பலத்த தீக்காயங்களுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனையில் தீ காயப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஒடிசாவை சார்ந்த ராகேஷ் என்ற இளைஞர்
உயிரிழந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உலக பட்டினி தினத்தையொட்டி ஏழை மக்களுக்கு மதிய உணவு – விஜய் மக்கள் இயக்கம் ஏற்பாடு

Jeni

பஞ்சாபில் 400 ‘ஆம் ஆத்மி’ மருத்துவமனைகள் தொடக்கம் – எதிர்க்கட்சிகள் சாடல்

Web Editor

மைதானத்தில் ஓடிச் சென்று தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய கவாஸ்கர்! – இணையத்தில் வைரல்!

Web Editor