சென்னையில் வீடு புகுந்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நசரத்பேட்டை அகரம் பகுதியில் வசித்து வரும் பக்ருதீன் அலி என்பவர், இருகாட்டு கோட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது வீட்டிலிருந்து செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் இருக்கும் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு செந்தில்குமார், மாரீஸ்வரன் என்ற இரு இளைஞர்களை கைதுசெய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இருவரும் செல்போன் திருடுவதற்க்கு பயன்படுத்தி வந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.