முக்கியச் செய்திகள் இந்தியா

விவசாயிகள் போராட்டம்: ஜவுளித்துறை கடுமையாக பாதிப்பு!

விவசாயிகளின் போராட்டங்களால் ஜவுளித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சூரத் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும் குளிரையும் தாங்கிக் கொண்டு விவசாயிகள் தொடர் போராட்டத்தை மேற்கொள்கின்றனர். நாடு முழுவதும் அவர்களுக்கு ஆதரவுக் குரல் எழுந்துள்ளது. அவர்களுக்கு ஆதரவாக கடையடைப்பு போராட்டங்களும் நடந்து வருகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டங்களால் ஜவுளித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சூரத் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். போக்குவரத்து பாதிக்கப்படுவதால் சூரத்தில் இருந்து ஜவுளிப் பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல் நீடிப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டு வரும் நிலையில் புதிய சிக்கலாக விவசாயிகளின் போராட்டம் அமைந்துவிட்டதாக சூரத் ஜவுளி வியாபாரிகள் கூறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கோலாகலமாக நடபெற்ற ஆரணி வெங்கடாசலபதி கோயில் கும்பாபிஷேகம்

Web Editor

சசிகலாவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு; முடித்துவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்

Arivazhagan Chinnasamy

பெரியார் சிலை மீது காவி துண்டு போர்த்திய மர்ம நபர்கள்!

Gayathri Venkatesan

Leave a Reply