இந்தியாவில் நடைபெற்றும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக கருத்து தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் ஒன்றினைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே நேற்று, சீக்கிய மதகுரு நானக்கின் 551-வது பிறந்த நாளை ஒட்டி நடந்த ஆன்லைன் நிகழ்வு ஒன்றில் பேசிய கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “இந்தியாவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்த செய்திகளை என்னால் கண்டுகொள்ளாமல் இருக்க முடியவில்லை. இந்த இக்கட்டான சூழலில் நமது குடும்பம் மற்றும் நண்பர்கள் குறித்து நாங்கள் கவலைக்கொண்டுள்ளோம். அமைதியான வழியில் உரிமைக்காகப் போராடுபவர்களுக்கு கனடா என்றும் துணை நிற்கும் என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்துகிறேன் என தெரிவித்திருந்தார்.
கனடா பிரதமரின் இந்த ஆதரவு கருத்து நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது. இந்நிலையில் கனடா பிரதமரின் கருத்து தொடர்பாக தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தா, இந்தியாவில் விவசாயிகள் தொடர்பான கனடா தலைவர்களில் சில தவறான தகவல்களை நாங்கள் கண்டிருக்கிறோம். ஒரு ஜனநாய நாட்டின் உள்விவகாரங்கள் தொடர்பான வெளிநாட்டு தலைவர்களின் கருத்து தேவையற்றது என தெரிவித்துள்ளார்.