சினிமா

விவசாயிகள் போராட்டம்…. கங்கனாவின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த பாடகர் தில்ஜித் தோசாஞ்!

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது தொடர்பாக தன்னை விமர்சித்த கங்கனா ரனாவத்துக்கு பாடகர் தில்ஜித் தோசாஞ் பதிலடி கொடுத்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு எதிர்கட்சிகளும், திரை பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை டெல்லியில் விவசாயிகளின் போராட்ட களத்திற்கு நேரில் சென்ற பாடகர் தில்ஜித் தோசஞ் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் கடும் குளிரில் போராடி வரும் விவசாயிகளுக்கு போர்வை வாங்கிக்கொள்ள ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார். இதே போல நடிகை பிரியங்க சோப்ராவும் தனது ஆதரவை தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனிடையே வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளையும் போராட்டத்தை ஆதரிப்பவர்களையும் நடிகை கங்கனா கடுமையா விமர்சித்து வருகிறார். அதன்படி விவசாயிகளுக்கு உதவிய பாடகர் தில்ஜித்தையும், பிரியங்கா சோப்ராவையும் அவர் விமர்சிக்க தவறவில்லை. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், “போராட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாயிகள் மட்டுமல்ல; அவர்களை ஆதரிக்கும் ஒவ்வொராலும் பிரச்னைதான். விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்பவர்கள் அவர்களின் சுயலாபத்திற்காக அப்பாவி விவசாயிகளை வன்முறையில் ஈடுபட தூண்டுகிறார்கள். தில்ஜித்தும், பிரியங்கா சோப்ராவும் விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் தவறாக வழிநடுத்துகிறார்கள்.. இதற்காக அவர்களுக்கு நிறைய லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது” என பதிவிட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தனர்.

ஆனால் இதன் பின்னரும் தனது விமர்சனத்தை நிறுத்திக்கொள்ளாத கங்கனா, நேற்று தில்ஜித் குறித்து கேலி செய்து ட்வீட் ஒன்றை செய்திருந்தார். அதில், தனது புகைப்படங்களை பதிவிட்டு “இன்று நான் 12 மணிநேர படப்பிடிப்பிற்குப் பிறகு சென்னையில் ஒரு தொண்டு நிறுவனத்தின் விழாவில் கலந்துகொண்டேன். இந்த மஞ்சள் நிற உடையில் நான் எப்படி இருக்கிறேன். ‘தில்ஜித் எங்கே? அவரை எல்லோரும் தேடுகிறார்கள்?” என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பாடகர் தில்ஜித் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “நான் காலையில் எழுந்தவுடன் ஜிம்மிற்கு சென்றேன். நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு. இப்போது, தூங்கப்போகிறேன்” என்று கிண்டல் செய்து பதிவிட்டிருக்கிறார். அவரின் இந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தில்ஜித்தின் இந்த ட்வீட்டிற்கு கங்கனா என்ன பதில் தரப்போகிறார் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விமர்சனம்: கார்த்தியின் “விருமன்” திரைப்படம் எப்படி உள்ளது?

Web Editor

பசுமை நாயகன் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

Arivazhagan Chinnasamy

ஓடிடி-யில் வெளியாகிறதா சாய் பல்லவி நடித்த படம்?

Halley Karthik

Leave a Reply