டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கும், அரசியல் கட்சிகளுக்கும் தொடர்பு இல்லை என பிரதமர் மோடிக்கு விவசாயிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டிருந்தார். இந்நிலையில், அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் எதிர்க்கட்சிகளால் வடிவமைக்கப்படுவதாக அரசு கருதுவது தவறானது என கூறியுள்ளது. மேலும், அரசியல் கட்சிகள் போராட்டத்தை தூண்டி விடுவதாக பிரதமர் கூறுவது தவறானது என்றும், தங்களின் கோரிக்கை எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் இணைக்கப்படவில்லை எனவும் விவசாயிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.