முக்கியச் செய்திகள் இந்தியா

விவசாயிகள் போராட்டத்தால் ரயில்வே துறைக்கு ரூ.2,400 கோடி இழப்பு!

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் 31ஆவது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு குரல்களும் நாடு முழுவதும் எழுந்து வருகிறது.

இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தால் இந்திய ரயில்வே துறைக்கு 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே பொது மேலாளர் அசுதோஷ் கங்கல் கூறியுள்ளார். விவசாயிகள் போராட்டத்தால் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ரயில்வேக்கு 2,400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.

சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சில ரயில்கள் வேறு வழியாக அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகள் போராட்டத்தால் சரக்கு ரயில்களும் உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ஊரடங்கு சலுகைகள் அறிவிப்பு!

Jeba Arul Robinson

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு!

Vandhana

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு நூதன தீர்ப்பளித்த பஞ்சாயத்து

Jeba Arul Robinson

Leave a Reply