விவசாயிகளுக்கு நன்மை ஏற்பட்டுவிடக் கூடாது என்று திமுக நினைப்பதாக பா.ஜ.க மாநிலத்தலைவர் எல்.முருகன் குற்றம் சாட்டி உள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவையும் ஊழலையும் பிரிக்க முடியாது என்றும் திமுகவையும், கமிஷனையும் பிரிக்க முடியாது என்றும் தெரிவித்தார். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருவதையும் சுட்டிக்காட்டிய அவர், விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்ய வேளாண் சட்டம் வகை செய்வதாகவும் குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: