செய்திகள்

விவசாயிகளின் போராட்டத்திற்கும், அரசியல் கட்சிகளுக்கும் தொடர்பு இல்லை: பிரதமருக்கு விவசாயிகள் கடிதம்!

டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கும், அரசியல் கட்சிகளுக்கும் தொடர்பு இல்லை என பிரதமர் நரேந்திர மோடிக்கு விவசாயிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், போராட்டத்தை கைவிடும்படி விவசாயிகளுக்கு மத்திய வேளாணத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கடிதம் எழுதியிருந்தார். இதனிடையே,மத்திய அமைச்சரின் கடிதத்தை அனைத்து விவசாயிகளும் படிக்க வேண்டும் என்றும், விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டிருந்தார். இந்நிலையில், அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் தோமர் ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளது. அதில், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் எதிர்க்கட்சிகளால் வடிவமைக்கப்படுவதாக அரசு கருதுவது தவறானது என கூறியுள்ளது. மேலும், அரசியல் கட்சிகள் போராட்டத்தை தூண்டி விடுவதாக பிரதமர் கூறுவது தவறானது என்றும், தங்களின் கோரிக்கை எந்த ஒரு அரசியல் கட்சியுடன் இணைக்கப்படவில்லை எனவும் விவசாயிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தனியார் வேலை: உள்ளூர் மக்களுக்கு 75% இடஒதுக்கீடு அளிக்கும் ஜார்கண்ட்!

Jeba Arul Robinson

செங்கல்பட்டில் என்கவுன்ட்டர்: 2 பேர் பலி

G SaravanaKumar

சபரிமலை கோயிலில் இன்று இரவு வரை மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி

Web Editor

Leave a Reply