விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாராலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட 15 நபர்களுக்கு 3 கோடியே 98 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை உலக அளவில் எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலு, விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்த முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார். வாய்ப்புகளை பயன்படுத்தி, வீரர், வீராங்கனைகள் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.