இந்தியா

வியாட்நாம் பிரதமர் என்குயென் ஸுவானுடன் 21 ஆம் தேதி பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

இந்தியா- வியாட்நாம் இடையே வரும் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் இருநாட்டு தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் 21 ஆம் தேதி இந்தியா-வியட்நாம் ஆகிய இரு நாடுகளிடையே காணொலி வாயிலாக நடைபெற உள்ள உச்சிமாநாட்டில் இரு நாட்டுப் பிரதமர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த மாநாட்டின் போது வியட்நாம் பிரதமர் என்குயென் ஸுவானுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த உச்சி மாநாட்டில் இரு நாடுகள் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துதல், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்களை வழங்குதல் ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

85-ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

போலியோ திட்டத்தை போல தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் : மணீஷ் சிசோடியா

Jeba Arul Robinson

கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி: பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

G SaravanaKumar

Leave a Reply