வழுக்கு மரம் ஏறும் போட்டியில் 60 வயது முதியவர் கலந்து கொண்டு வெற்றி பெற்று கிராமத்தினரை வியப்பில் ஆழ்த்தினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவின்போது பொங்கல் பானை வைத்து புத்தாடை அணிந்து மாடுகளுக்கு படையலிட்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் கோயிலில் 60 அடி உயரம் கொண்ட மரத்தை நட்டு அதில் பரிசுத்தொகையை வைப்பார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதேபோல இந்த ஆண்டும் 60 அடி மரம் நடப்பட்டு அதில் பரிசுத்தொகை கட்டப்பட்டிருந்தது. இதனை எடுப்பதற்காக 60 வயதான நாசி என்ற முதியவர் வழுக்கு மரம் ஏறி பரிசுத் தொகையை பெற்று சென்றார். இச்சம்பவம் கிராம மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அவரது உடல் வலிமையும், மன உறுதியும் அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் உத்வேகத்தை அளிக்கும் வகையில் இருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.