குற்றம்

வழிப்பறி கும்பலால் தாக்குதலுக்குள்ளான நடிகர் கெளதம் கார்த்திக்.!

சென்னையில் சைக்கிளிங் சென்ற நடிகர் கவுதம் கார்த்திக்கை வழிமறித்து கீழே தள்ளி தாக்கி செல்போனை பறித்துச் சென்ற திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மறைந்த பழம்பெரும் நடிகர் முத்துராமனின் பேரனும், நடிகர் கார்த்திக்கின் மகனுமான நடிகர் கவுதம் கார்த்திக் போயஸ் தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடல், தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கவுதம் கார்த்திக் செல்லப் பிள்ளை, நவரச உட்பட புதிய படங்களில் நடித்து வருகிறார். தினமும் அதிகாலை தனது ஸ்மார்ட் சைக்கிள் மூலம் சைக்கிளிங் பயிற்சி செல்வதை வழக்கமாக கொண்ட கவுதம் கார்த்திக், இன்று அதிகாலை மெரினா வழியாக கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்கிளிங் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ராதாகிருஷ்ணன் சாலை – டி.டி.கே சாலை சந்திப்பில் தனது சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது அவரை வழிமறித்த செல்போன் திருடர்கள் அவரிடம் வழிபறி செய்ய மிரட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்ப முயன்ற நடிகர் கவுதம் கார்த்திக்கை கீழே தள்ளி அவரது கையில் பேண்டு மூலம் சுற்றப்பட்டிருந்த விலையுர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர். இதையடுத்து தகவலறிந்து வந்த மயிலாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர். செல்போன் திருடர்களை பிடிக்க மயிலாப்பூர் குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், வழிபறி கொள்ளையர்கள் கீழே தள்ளி தாக்கியதில் லேசான காயமடைந்த கவுதம் கார்த்திக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் – மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை

Web Editor

சென்னையில் திருநங்கை காவலருக்கு பாலியல் தொல்லை

Halley Karthik

திருமணமான 10 நாட்களில் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த பெண் கைது

G SaravanaKumar

Leave a Reply