திருப்பதி அருகே ஐஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வயலில் இறங்கி நாற்று நடவு செய்தது விவசாயிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பாடி பேட்டை பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் பரத் குப்தா ஐஏஎஸ் தலைமையில் திருப்பதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரமேஷ் ரெட்டி, திருப்பதி மாநகராட்சி ஆணையர் கிரிஷா ஆகியோர் சென்றனர். அப்பொழுது விவசாயிகள் தங்களது வயல்வெளியில் நடவு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனை பார்த்த ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் தண்ணீர் நிரம்பிய வயல்வெளியில் இறங்கி நடவு பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள விவசாயிகளிடம் விவசாயம் குறித்தும் அவர்களின் தேவை குறித்தும் கேட்டறிந்தனர். இது அப்பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்