முக்கியச் செய்திகள் தமிழகம்

ரெம்டெசிவர் மருந்து வாங்க பொதுமக்கள் அலைமோதல்!

சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவர் மருந்து வாங்க பொதுமக்கள் அலைமோதுவதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 18,692 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரே நாளில் 113 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் ஒரே நாளில் 18,692 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,66,756 ஆக உள்ளது.

தமிழகத்தில் 2,22,78,880 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினத்தில் கொரோனா சிகிச்சை முடிந்து 16,007 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை 10,37,582 ஆக உள்ளது. ஒரே நாளில் 113 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,046 ஆக உள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்துக்காக , சுகாதாரத்துறையால் ரெம்டெசிவர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் மட்டுமே இம்மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பிற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் இங்கு வந்து காத்திருக்கின்றனர்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே, 2 கவுன்ட்டர்கள் மூலமாக மருந்து விநியோகிக்கப்படும் நிலையில், இரவு பகலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரே இடத்தில் விற்பனை செய்வதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

‘குவாட்’ உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

Halley Karthik

இந்தியாவில் புதிதாக 22, 842 பேருக்கு கொரோனா

Halley Karthik

ஓபிஎஸ் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டு!

எல்.ரேணுகாதேவி