முக்கியச் செய்திகள் இந்தியா

ரூ.971 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டடம்…. டிச.10ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு வரும் 10-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, வரும் 10-ஆம் தேதி நடைபெற உள்ள அதிநவீன நாடாளுமன்ற கட்டடத்துக்கான பூமி பூஜையில் பிரதமர் பங்கேற்க உள்ளதாக கூறினார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மக்களவை எம்.பி-க்களுக்கு 888 இருக்கைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மாநிலங்களவை எம்.பி-க்களுக்கு 326-க்கும் அதிகமான இருக்கைகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்த அவர் இரு அவைகளையும் சேர்த்து ஒரே நேரத்தில் 1272 பேர் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், இந்த மாத்திலேயே கட்டுமானப்பணிகள் தொடங்கும் என கூறியவர், இரண்டு ஆண்டுகளுக்குள் நாடாளுமன்றம் கட்டி முடிக்கக்கப்பட்டு 75 ஆவது இந்திய சுந்திர தினம் முதல் புதிய நாடாளுமன்றம் செயல்படும் என்றும் ஓம் பிர்லா தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தேர்தல் வழக்கு: உதயநிதிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

EZHILARASAN D

இலங்கை பொருளாதார நெருக்கடி அனைவருக்கும் எச்சரிக்கை: ஐநா

Mohan Dass

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றம்? – முட்டி மோதும் 2ம் கட்ட தலைவர்கள்

EZHILARASAN D

Leave a Reply