மன்னார் வளைகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.
இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டும் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புரெவி புயலை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 5 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்தது. இந்நிலையில், மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுகுறைந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே இடத்தில் நிலை கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ராமநாதபுரம் தூத்துக்குடி சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.